இன்பக் கனாப்போல தோன்றவில்லை அற்புதமாய்! Poem by Dr.V.K. Kanniappan

இன்பக் கனாப்போல தோன்றவில்லை அற்புதமாய்!

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

அவனென்னைக் காதலிப்பான் என்றெண்ணி னேன்நான்;
அவனெந்தன் வாயி லளித்தான் - நவமுத்தம்;
நோய்ப்பட்ட ஓர்பறவை யானேன்; தெற் கேசெல்லும்
வாய்ப்பில் நிலையிலே நான்! 1

நவம் - புதுமை, புதிதாய், முதன்முதலாய்
வாய்ப்பில் - வாய்ப்பு + இல்லா

என்னையவன் காதலிக்கின் றானென் றறிந்தாலும்
இன்றிரவு துக்கத்தில் என்னிதயம்! - நன்றாக
நான்கண்ட இன்பக் கனாப்போல அம்முத்தம்
தோன்றவில்லை அற்புதமாய்த் தான்! 2

This is a translation of the poem The Kiss by Sara Teasdale
Wednesday, November 2, 2016
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
This poem 'இன்பக் கனாப்போல தோன்றவில்லை அற்புதமாய்! ' is a translation by me of an English poem by Poet.Sara Teasdale.

The Kiss

I hoped that he would love me,
And he has kissed my mouth,
But I am like a stricken bird
That cannot reach the south.

For though I know he loves me,
To-night my heart is sad;
His kiss was not so wonderful
As all the dreams I had. - Sara Teasdale
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success