ஆசிரியர் தின கவிதை Poem by Muthukumaran P

ஆசிரியர் தின கவிதை

Rating: 5.0

உப்பும் உணவும் போல
பூட்டும் சாவியும் போல
மலரும் மணமும் போல
மனசும் நினைவும் போல
கடலும் அலையும் போல
வானமும் நிலவும் போல்
ரயிலும் தண்டவாளம் போல
பட்டமும் நூலும் போல
நூலும் அடையும் போல
ஊசியும் நூலும் போல
கவிதையும் கவிஞனும் போல
பறவையும் இறக்கையும் போல
சிங்கமும் வீரமும் போல
குயிலும் குரலும் போல
ஆசிரியர் மாணவர்கள்
உறவு புனிதமானதாக
உறுதியானதாக இருக்க
வேண்டும் மாணவர்களுக்கு
வாழ்க்கை என்னும் திசையை
காட்டக்கூடிய கருவி ஆசிரியர்கள்
மாணவர்களை புனிதமானவர்களாக
உருவாக்கும் சிறந்த ஆளுமைகள்
ஆசிரியர்கள் பள்ளி என்பது கோவில்
அதில் உள்ள ஆசிரியர்கள் தெய்வங்கள்
பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் பக்தர்கள்.
பக்தர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியது
ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை.
கவிதை ஏழுதியவர்
முத்துக்குமரன்.பி
சென்னை-95.

ஆசிரியர் தின கவிதை
POET'S NOTES ABOUT THE POEM
TEACHERS STUDENT RELATED POEM
COMMENTS OF THE POEM
Indira Renganathan 11 September 2021

Excellent write with a neat flow of marvelous expression.....top score

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success